வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (16:06 IST)

தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.. வேலூரை புறக்கணித்த கமல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், வேலூர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுகிறது என்ற தகவலை ஒட்டி திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தை துரை முருகன் ஆகியோரின் நெருக்கமானவர்களின் விட்டில் இருந்து பல லட்ச ரூபாய் பணம் வருமான வரித்துறையினால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது கதிர் ஆனந்த் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் பின்பு வேலூர் தொகுதியில் வரும் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், அந்த தொகுதியில் நடக்கவிருக்கும் தேர்தலை மக்கள் நீதி மய்யம் புறக்கணிக்கிறது எனவும், மேலும் அந்த தேர்தல் நியாமமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை மக்கள் நீதி மய்யத்திற்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.