1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2000 rupees note photo copied by 3 men

2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்த நபர்கள்: மோசடி வழக்கில் கைது

2000 ரூபாய்
கன்னியாகுமரியில் 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ரமேஷ் என்பவர் ஒரு திரையரங்கில் 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அவர் கொடுத்த ருபாய் நோட்டை ஆய்வு செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதால், திரையரங்கு ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், ரமேஷ் கொடுத்த 2000 ரூபாய் நோட்டு, ஜெராக்ஸ் செய்த நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான தினகரன், ஜோசப், மெனோவா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டுகளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
மர வேர்களுக்கு இடையே தூக்கி வீசப்பட்ட குழந்தை... திடுக் சம்பவம்