புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (08:57 IST)

ஆண்டுக்கு 72000 ரூபாய் திட்டம்; ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் – ராகுல் உறுதி !

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கவனம் பெற்ற திட்டமான ஏழை, எளியக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72000 ரூபாய் அளிக்கும் திட்டம் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 4 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இப்போது ஐந்தாவது கட்டத்திற்கான தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்துவருகின்றனர். மே 6ஆம் தேதி பிகார், ஜார்கண்ட், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு ஐந்தாம் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ‘ மோடி அரசு தான் சொன்ன கருப்புப்பணம் ஒழிப்பு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புத் திட்டம் என எதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் நாட்டு மக்களை விட 15 தொழிலதிபருக்காகதான் வேலைப் பார்த்து வந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் மாதம் 6000 ரூ வழங்கும் திட்டம் ஒரு ஆண்டுக்குள் 5 கோடி குடும்பங்களுக்கும் வழங்கப்படும். ‘ எனக் கூறியுள்ளார்.