1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:49 IST)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் நேற்று வெளியான தமிழக அரசு உத்தரவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 12-ம் வகுப்பு தேர்வு நடக்கும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. இதன்படி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை தேதியை விரைவில் தேர்வுத்துறை வெளியிடும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது