தொடர்புடைய செய்திகள்
- 4 பந்துகளை வீணாக்கிய 2 வீரர்கள்… இதுதான் ராஜ்ஸ்தான் ராயல்ஸின் தோல்விக்குக் காரணம்!
- கொரோனா பாதுகாப்பு இல்லாமல் பயணிகளைக் கையாளும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள்… அதிகாரிகள் நோட்டீஸ்!
- வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
- இங்க இத்தன பேர் இருக்கும்போது மிஷ்கின் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்… பிசாசு 2 ஒளிப்பதிவாளர் பதிவு!
- 13.72 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு தேர்வு? – அதிகாரிகள் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
