திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (16:39 IST)

ஜூன் மாதம் வெளியாகும் 83 திரைப்படம்! 5 மொழிகளில் ரிலீஸ்!

இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை ஒட்டி அப்போது அணியின் தலைவராக இருந்த கபில்தேவ்வின் பயோபிக்காக 83 படம் உருவாகி உள்ளது.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இதை அடிப்படையாக வைத்து “83: என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. கபில் தேவ்வின் உண்மைக் கதையான இதில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துவருகிறார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்த்திரத்தில் ஜீவா நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலிஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது அந்த திரைப்படம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தி, தமிழ், கன்ண்டம், தெலுங்கு மற்றும்  மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.