வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (10:25 IST)

பிளஸ் டூ பொதுத்தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது .

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்குகியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பயமில்லாமல், பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 73 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.மேலும் பொதுத்தேர்வை நெல்லையில் 10,315 மாணவர்கள், 11,439 மாணவிகள் என மொத்தம் 21,754 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
 
நெல்லையில் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 1507. தேர்வு பணியில் ஈடுபடும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1968.