தொடர்புடைய செய்திகள்
- இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் என அறிவிப்பு..!
- சென்னையில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை திடீர் பாதிப்பு.. பொதுமக்கள் கடும் அவதி..!
- தென்சென்னையின் பாஜக வேட்பாளர் குஷ்புவா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
- மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மார்ச் 4ல் சென்னையில் பொதுக்கூட்டம்..!
- கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே பராமரிப்பு பணி.. நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து..!
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. சென்னையில் இயங்கி வந்த 11 ஸ்பாக்களுக்கு சீல்..!
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போது மசாஜ் செய்யும் ஸ்பா சென்டர் அதிகரித்து வருகிறது என்பதும் பெரிய பணக்காரர்கள் இந்த ஸ்பா சென்டர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.
ஆனால் அதே நேரத்தில் பல ஸ்பா சென்டர்களில் மசாஜ் தொழில் செய்யும் பெயரில் பாலியல் தொழில் செய்யப்பட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.
அந்த வகையில் தற்போது அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து ஸ்பா சென்டர்களில் சோதனை நடந்தபோது உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சில இடங்களில் நடந்தது என கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva
