வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (07:44 IST)

சென்னையில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை திடீர் பாதிப்பு.. பொதுமக்கள் கடும் அவதி..!

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்தியா முழுவதும் தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏராளமான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிலையில் நேற்று திடீரென ஏர்டெல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் போன் பேச முடியாமல், இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

சென்னையில் உள்ள ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் செல்போனில் பேச முடியவில்லை என்றும் நெட்வொர்க் மிகவும் குறைந்த அளவில் இருந்ததால் போன் செய்தாலும் எதிர்முனையில் பேசுபவரின் வாய்ஸ் சரியாக கேட்கவில்லை என்றும் ஏர்டெல் சிம் வைத்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்
 
திடீரென ஏற்பட்ட இந்த சேவை குறைபாடு தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva