1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (12:23 IST)

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு மற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு மறு கூட்டல் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வழியாகியுள்ளது. 
 
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று காலை வெளியான நிலையில் சுமார் 92 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் குறைவாக மதிப்பெண் இருப்பதாக கருதினால் மறு கூட்டலுக்கு மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
அதேபோல் விடைத்தாள் நகல் பெற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை  அறிவித்துள்ளது 
 
மேலும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூலை 2ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ள நிலையில் இதற்கான விண்ணப்பம் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
Edited by Mahendran