ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (12:16 IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 497 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளி மாணவி சாதனை..!

10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட 92 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் அவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான சுஷ்யா என்பவர் 10ஆம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளார்.விவசாய கூலி தொழிலாளி மகளான இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
இவர் தமிழில் 98 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran