வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (12:09 IST)

விரைவில் நாம் சந்திப்போம்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் முக்கிய செய்தி..!

10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நன்றாக படித்து அடுத்த முறை தேர்வு எழுதுங்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தளபதிியுமான விஜய் தனது சமூக வலைதளத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூறிய முக்கிய செய்தி பின் வருமாறு:
 
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். 
 
 அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன், விரைவில் நாம் சந்திப்போம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran