வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (16:46 IST)

என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள்: அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவன்!

suicided
என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள் என மாணவர் தனது அப்பா அம்மாவிற்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
நாமக்கல்லை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தருண் என்பவரின் தந்தை குடிபோதையில் தினமும் வீட்டிற்கு வந்து அவரது அம்மாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது
 
இதனால் மனம் வெறுத்த தருண் தனது வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தை கடிதத்தில் என் சாவிற்கு பிறகாவது அப்பா அம்மா இருவரும் ஒன்று சேர்ந்து சண்டை போடாமல் வாழுங்கள் என எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது