திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (15:52 IST)

கல்லூரி மாணவி தற்கொலை....

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள்  (19). இவர் கடலூர் செம்மண்டலத்தில்  இயங்கி வரும் கே.எம்.சி பெண்கள் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலையில் கல்லூரி வந்தததும் கழிவறைக்குச் சென்ற  மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில்,  நான் எழுதிய தேர்வில் ஃபெயில் ஆயிவவோமேனு பயமா இருக்கு அதா போய்டலாம்னு முடிவு பண்ணிடேன்’ என்று எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.