1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 108 service number damages due to technical difficulties in BSNL

பி.எஸ்.என்.எல்.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு...

bsnl
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கிவைக்கப்பட்ட இலவச அவசர சேவை திட்டமான 108 சேவையால் பெரும்பாலான மக்கள் பலனடைந்து வருகின்றனர். இக்கட்டான நிலையிலிருந்து பல உயிர்கள் சமயத்தில் மீட்கப்பட்டுள்ளானர். இந்நிலையில் இந்த 108 இலவச சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  காரணமக தமிழ்நாட்டில் 108 இலவச சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அவசர சேவைக்கு தற்காலிகமான 044- 40170100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல இச்சேவை எண் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு