திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 ஆகஸ்ட் 2018 (13:16 IST)

பிஎஸ்என்எல் சோட்டா பேக்: ஆஃபர் விவரம் உள்ளே!

சுரந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், டெலிகாம் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் புதிய ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக் என்னும் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆகஸ்ட் 10-ல் இருந்து ஃப்ரீடம் ஆஃபர் - சோட்டா பேக் திட்டம் இந்தியாவில் பயனர்களுக்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது. 
 
# ரூ.9 சோட்டா பேக்-ன் படி, வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், 80Kbps வேகத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் பெற முடியும். இந்த பேக் ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 
# ரூ.29 ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக்-ல் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், 80Kbps வேகத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் 7 நாட்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த சலுகை டெல்லி மற்றும் மும்பை தவிர்த்து மீத மாநிலங்களில் கிடைக்கும். அதோடு, இந்த சலுகையில் 25 ஆம் தேதி வரை மாற்றம் கொண்டு வரப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.