1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian people dead in Thailand

தாய்லாந்தில் இந்தியர் சுட்டுக்கொலை

தாய்லாந்து
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற  இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ராத்சத்தேவி மாவட்டத்தில் உள்ள பெவிலியன் ஹோட்டல் அருகே இரு தரப்பினரிடையே கடுமையான கோதல் ஏற்பட்டது.
 
இந்த கடுமையான மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி சுட்டுக்கொண்டனர். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இந்திய சுற்றுலாப் பயணி தீரஜும், லாவோ சுற்றுலா பயணி கியோவாங்சா ஆகிய இருவரும் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.
 
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தல் தள்ளி போனதற்கு நாங்கள் காரணமா? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்