1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 106 members in election team by EPS

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு 31 பேர் தான் , ஆனால் அதிமுகவுக்கு 106 பேர்!

Mk Stalin Edappadi
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் 31 பேர்கள் கொண்ட தேர்தல் குழுவை திமுக அறிவித்திருந்தது. இந்த தேர்தல் பணிக்குழுவில் 11 அமைச்சர்கள் இரண்டு எம்பிகள் ஆகியோர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்த நிலையில் அதிமுக 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அறிவித்தார். இந்த தேர்தல் பணிக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து அதிமுகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவும் களத்தில் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள்; தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் விருது?