1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (18:15 IST)

அதிமுகவின் இந்த நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம்: டிடிவி.தினகரன்

dinakaran
அதிமுகவின் தற்போதைய நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் பாஜக நினைத்தால் அதிமுக ஒருங்கிணைந்துவிடும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மற்றும் தினகரன் சசிகலா ஆகிய பிரிவுகளில் இயங்கி வருகிறது.
 
இந்த நிலையில்அதிமுக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது பாஜக நினைத்தால் மட்டுமே முடியும் என்றும் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் புள்ளி
 
 
Edited by Mahendran