1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 26 ஜனவரி 2023 (11:48 IST)

கொடியேற்றிய ஆளுனர்! நிகழ்ச்சிக்கு வராத முதல்வர்! – மீண்டும் மோதல்!

இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானாவில் ஆளுனர் கொடியேற்றிய நிகழ்விற்கு முதல்வர் வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர் ராவுக்கும் அம்மாநில பாஜகவுக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் சில நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி தெலுங்கானா வந்தபோதுகூட அவரை வரவேற்கவோ, நிகழ்ச்சிகளிலோ சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று குடியரசு தின விழாவில் ஆளுனர் மாளிகையில் அம்மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவில் நிகழ்ச்சிகள் முடிந்து புதுச்சேரி செல்லும் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

Edit by Prasanth.K