தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- குளிரை விட உக்கிரமாக வருகிறது கோடை வெயில்! – நிபுணர்கள் எச்சரிக்கை!
- நமது உணவுப் பழக்க வழக்கம் !- சினோஜ் கட்டுரைகள்
- சென்னையின் பல இடங்களில் அதிகாலை முதல் மழை: குளிர்ச்சியான தட்பவெப்பம்!
- அதிக மருத்துவ குணங்களை கொண்ட வெள்ளை வெங்காயம் !!
கோடை தொடங்கும் முன்னே 100 டிகிரி செல்சியஸ் வெயில்.. பொதுமக்கள் திண்டாட்டம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கோடை காலம் தொடங்கும் என்பதும் மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்னும் மார்ச் மாதமே பிறக்காத நிலையில் கோடை வெயில் உச்சத்தை அடைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 90 டிகிரிக்கு மேல் அதிகமாக வெப்பம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஈரோட்டில் ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கும் இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. கோடை தொடங்கும் முன்னரே 100 டிகிரி வெயில் உச்சத்தை தொட்டு உள்ள நிலையில் அக்னி நட்சத்திர நேரத்தில் என்ன நடக்குமோ என்று பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கோடை கோடை காலம் தொடங்க முன்னரே வெயில் உச்சத்திற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்கும் முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Siva
