சென்னையின் பல இடங்களில் அதிகாலை முதல் மழை: குளிர்ச்சியான தட்பவெப்பம்!
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருவதையடுத்து குளிர்ச்சியான தட்ப வெப்பம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் தற்போது குளிர்ச்சியான தட்ப வெட்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கேட்டுக்கொள்கிறேன்.
Edited by Siva