ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (17:14 IST)

அதிக மருத்துவ குணங்களை கொண்ட வெள்ளை வெங்காயம் !!

White Onion
வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம்,  மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அளிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம்.


வெள்ளை வெங்காயம் தினம் தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.

வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது. அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

உயர் அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். வெள்ளை வெங்காயத்துடன் சம அளவு வெள்ளரிக்காய் சேர்த்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளை சதை குறையும்.