1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:12 IST)

குளிரை விட உக்கிரமாக வருகிறது கோடை வெயில்! – நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் கோடை வெயில் உக்கிரமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது குளிர்காலம் முடிவை எட்டி வரும் நிலையில் வசந்த காலம் தொடக்கம் காண்கிறது. சில வாரங்களே நீடிக்கும் இந்த வசந்த காலத்திற்கு பின் மார்ச் இறுதி வாக்கில் கோடைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வடமாநிலங்களிலும், பல பகுதிகளில் குளிர் வழக்கத்தை விட அதிகமாக வாட்டி வருகிறது. தொடர்ந்து வரும் வெயில் காலம் இதைவிட உக்கிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.


அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் எல் நினோ தாக்கம் 58% அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வெயில், மழை ஆகியவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவின் பல நகரங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸை எட்டியது. இந்த ஆண்டும் அதுபோன்றதொரு அதிகபட்ச வெப்பநிலையை சில நகரங்கள் எட்டக்கூடும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K