1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10 years jail for chennai doctor

சக மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. அரசு மருத்துவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்!

jail
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது சக மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர் தான் தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்த சக மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜிகே மணியின் மகன் திடீர் விலகல்.. பாமகவில் பரபரப்பு!