வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:07 IST)

மியான்மர்: ஆங் சாங் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியான்மர் நாட்டின் அரசியல் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மர் நாட்டை ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் .
மியான்மரில் கைதான தலைவர்களில் முக்கியமானவர் ஆங் சாங் சூகி.

நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்தியதாக  ஆங் சாங் சுகிக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து,  அவர்  ஆட்சியின் போது ஊழல் செய்ததாகவும், அவர்  மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்த 77 வயதான ஆங் சாங் சூகி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த போதிலும், அவருக்கு எதிரான குற்றம்  நிரூபனமாகியுள்ளதால், தற்போது, மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக ஏற்கனவே 12 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த  நிலையில் மேலும், அவருக்கு 7 ஆண்டுகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால்  ஆங் சாங் சூகியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.