1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10 srilankan visit dhanush kodi

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி: கள்ளப்படகில் 10 பேர் தனுஷ்கோடி வருகை

இலங்கை
நடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதும் இந்தியா உள்பட ஒரு சில நாடுகள் உதவி செய்தும் கூட அந்நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவ்வப்போது தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு அந்நாட்டு மக்கள் கள்ளப்படகு மூலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று 10 பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இலங்கையில் இருந்து குழந்தைகள் பெண்கள் உள்பட 10 பேர் வந்ததாகவும் அவர்களை தமிழக காவல்துறை மீட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக முல்லைதீவிலிருந்து கள்ளப்படகில் புறப்பட்டு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மாதுளம்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து பலி.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!