1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. pet dog died after his owner passed away in mp

எஜமான் மரணமடைந்ததும் உயிரைவிட்ட செல்ல நாய்!.. அருகிலேயே அடக்கம்!..

dog
உலகில் பலருக்கும் செல்லப்பிராணியாக நாயை வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரத்த உறவுகளை விட, தான் பெற்ற பிள்ளைகளை விட செல்லப்பிராணி மீது அன்பும், பரிவும், பாசத்தையும் நபர்கள் பலரும் இருக்கிறார்கள்.

நன்றியுணர்வும், அன்பு, பாசமும் காட்டும் நாயை பலருக்கும் பிடிக்கும். தன்னுடைய மரணத்திற்கு பின் தனது செல்ல நாய்க்கு உயிலை எழுதி வைத்துவிட்டு சென்ற பல பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் தனது எஜமானர் இறந்து விட்டதால் அவரின் சமாயின் அருகிலேயே பல நாட்கள் படுத்திருந்த நாய்கள் பற்றிய உண்மை சம்பவங்களையும் நாம் படித்திருக்கிறோம்..

இந்நிலையில்த்ன, மத்திய பிரதேசத்தில் தனது எஜமானர் இறந்த சில மணி நேரங்களில் அவர் 15 வருடங்களாக வளர்த்து வந்த செல்ல நாயும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் தொழிலதிபராக இருந்தவர் பிரதீப்(67). இவர் டுக்கு என்கிற செல்லநாயை கடந்த 15 வருடங்களாக வளர்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் மாலை பிரதீப் எப்போது வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து டுக்கு கதவுக்கு அருகேலேயே காத்திருக்குமாம்.

சமீபத்தில் பிரதீப் உயிரிழந்தார். இரவு முழுவதும் சோகத்தில் டுக்கு குரைத்துக்கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்தநாள் பிரதீப்பின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் வழியில் டுக்கு உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து டுக்குவின் உடலை பிரதீப்பின் உடலுக்கு அருகிலேயே குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 4 பேர் கைது.. கமிஷன் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றிய போது பிடிபட்டனர்...