அரசு பள்ளி மாணவர்களின் எம்பிபிஎஸ் உள் ஒதுக்கீடு.. 7.5% உள் இடஒதுக்கீட்டை, 10% ஆக உயர்த்த முதல்வர் விஜய் திட்டம்...
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாஸ்டர் பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளார். தற்போதைய மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள் இடஒதுக்கீட்டை, 10% ஆக உயர்த்துவதற்கு அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த உள் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவது குறித்து விரிவாக ஆராய, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவர் விரைவில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 625 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைத்து வருகிறது.
இத்திட்டம் 10% ஆக உயர்த்தப்படும் பட்சத்தில், ஆண்டுதோறும் சுமார் 800-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து மருத்துவராகும் அரிய வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித் துறையில் தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Siva
