திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (10:40 IST)

மாதுளம்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து பலி.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

தென்காசி அருகே மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து திடீரென பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜா அனீஸ் - பாத்திமா தம்பதியின் ஒன்றை வயது மகன் மாதுளம் பழம் சாப்பிட்டதாக தெரிகிறது. இந்த பழத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயங்கியது. 
 
இதனை அடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையின் பெற்றோர் கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றை வைத்து குழந்தை திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva