1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10 district get more than 100 degree heat

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் அதிகரிக்க வாய்ப்பு என தகவல்..!

தமிழகம்
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்தது என்றும் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்த நிலையில் இன்றும் அதே அளவு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
7000ல் இருந்து 10000: உச்சத்திற்கு செல்லும் இந்திய கொரோனா பாதிப்பு..!