தொடர்புடைய செய்திகள்
- இந்த வருஷம் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? – வானிலை ஆய்வு மையம்!
- வெயில் பொளக்குது.. மீம்ஸ் தெறிக்குது..! – சிரிக்க வைக்கும் வெயில்கால மீம்ஸ்!
- அடுத்த 5 நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
- கொட்டும் மழையில் ஏழைகளை தேடி ஓடிய நயன்தாரா ஜோடி! – வைரலாகும் வீடியோ!
இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கடும் வெயில் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 12 முதல் அதாவது இன்று முதல் ஏப்ரல் 15 வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் அதாவது 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran
