1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:52 IST)

இன்று தங்கம் விலை சரிவு.. ஆனால் பொதுமக்கள் அதிருப்தி..!

இன்று தங்கம் விலை வெறும் கிராமுக்கு நான்கு ரூபாய் மட்டுமே குறைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று நான்கு ரூபாய் மட்டுமே அதில் குறைந்துள்ளது இன்றைய தங்கம் வெள்ளி மதிப்பு தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூபாய் 5676.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 32 குறைந்து ரூபாய் 45408.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6131.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 81.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva