1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:59 IST)

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!

Garlic
பூண்டு சாப்பிடுபவர்களுக்கு இதயம் தசைகள் வலுவாகும். மேலும் இதயரத்தகுழாய்களில் கொழுப்பு படுவதையும் தடுக்கிறது.


பூண்டு அல்லில்சிஸ்டின் என்படும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் கொண்டது. இது ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.

வயிற்றின் குடல்களில் பூச்சி தொந்தரவுகளால் அவதியுறுபவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் வாதத்தன்மை அதிகரிப்பதால் வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகளையும் பூண்டு நீக்கும்.

உணவை செரிமானம் செய்ய உதவும் அமிலங்களின் சமச்சீர் தன்மையை காக்கும். சில பூண்டு பற்களை நன்றாக இடித்து ஒரு ஸ்பூன் அளவு வாயில் போட்டு, சிறிது வெண்ணீர் அருந்துவதால் வாயு கோளாறுகள், அஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

பூண்டு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கண்களில் ஏற்படும் கண் அழுத்த பிரச்சனை நீங்கி, கண்பார்வைத்திறனை தெளிவாக்குகிறது. கண்களில் கருவிழியின் ஆற்றலையும் பூண்டில் இருக்கும் ரசாயனங்கள் மேம்படுத்துகிறது.