1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Amazing Benefits of Drinking Lemon Tea !!

லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Lemon Tea
லெமன் டீ செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீ தூளை கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை எலுமிச்சம் பழ சாற்றைக் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயாராகிவிடும்.


தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

உணவுகள் நன்றாகச் செரிமானம் ஆவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத சில உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எலுமிச்சையில் குவெர்செட்டின் உள்ளது, இது ஃபிளாவனாய்டு ஆகும், இது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சுவை மிகுந்த ரவா அப்பம் செய்வது எப்படி...?