விளக்குகளின் வகைகளும் அதன் அற்புத பலன்களும் !!
பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.
பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் நம்மால் ஏற்றி வைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
ஒரு முகம்- மத்திமம், இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை பெருகும், மூன்று முகம் - புத்திர இன்பம் கிடைக்கும், நான்கு முகம்- மாடு மனை வளம் சேரும், ஐந்து முகம் - செல்வம் செழிக்கும்.
பொதுவாக தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்றுவோம். இதற்கும் குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்களே பெறுவோம். ஆனாலும் விசேஷ பலன்களை மேலும் பெற சிறப்புத் திரி வகைகளும் உண்டு.
மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும். சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப் பாக்கியத்தை அருளும்.
வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும். தாமரைத் தண்டின் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும்.