1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (09:32 IST)

சிறுநீரை தாராளமாக பிரிய செய்யும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த இளநீர் !!

Tender Coconut
இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.


உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

வயிற்றுக் போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் இளநீரை பருகும்போது வயிறும் நிறைந்து போவதால், தேவையற்ற உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், நீரிழவு நோய் உள்ளவர்கள் இளநீர் பருகுவது மிகவும் நல்லது.