திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:26 IST)

தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும் முடக்கத்தான் கீரை !!

முடக்கு வாத நோய் மூட்டுகளை முடக்கி வைக்கிறது. இந்த கீரை முடக்கு வாத நோயினை சரிசெய்வதால் முடக்கத்தான் என பெயர் பெற்றது.


முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வருவதால் மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.

வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கத்தான் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வாயு கலைந்து வெளியேறிவிடும்.

ஜலதோஷம் மற்றும் ஒரு சில காரணங்களினால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படுகின்றது. இதனை போக்க வெந்நீரில் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி விட்டு ஆவி பிடிப்பதன் மூலமாக தலைவலி நீங்கும்.

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய் இருக்கும் இடத்தில் பற்று போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கலால் மூல வியாதி வந்தவர்களுக்கு, தினமும் பச்சையாக சிறிதளவு முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால், மூல நோய் விரைவில் குணமாகும்.