1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:08 IST)

நோய்களுக்கு எளிமையான முறையில் தீர்வு தரும் தண்ணீர் விட்டான் கிழங்கு !!

Thaneervittan Kilangu
தண்ணீர் விட்டான் கிழங்குல இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் இருக்கும். உடலை பலமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும்.


தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக ஏற்படுகின்ற உதிரப்போக்கை கட்டுப்படுத்த, 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கலாம்.

தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் வெட்டைச் சூடு குணமாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.