தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் கட்டணத்தை உயர்த்தியது Zomato.. ஆன்லைன் உணவு பிரியர்களுக்கு பேரிடி..!
- தோள் கொடுக்காதவன் முஸ்லீம் அல்ல.. மௌனம் ஏன்?. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி!...
- விமான நிலையம் அருகே தாக்குதல்!.. துபாய், அபுதாபி விமான நிலையங்கள் மூடல்!..
- ஈரானின் இதயத்தில் குண்டுபோட்ட அமெரிக்கா!.. கார்க் தீவில் தாக்குதல்!...
- இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி இல்லை!.. செய்திக்கு ஈரான் மறுப்பு!...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு!.. உணவு டெலிவரி கட்டணத்தை உயர்த்திய Zomato
எங்கேயோ இடி கிடைத்து எங்கேயோ மழை பெய்து போல ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையே எழுந்துள்ள போரால் இந்தியாவில் சமையல் சிலிண்டர் கேஸ் தட்டப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது நாட்டில் ராணுவ தளங்களை அமைத்துக் கொள்ள இடம் கொடுத்த சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி, துபாய் போன்ற வளைகுடா நாடுகளின் மீது கடந்த பல நாட்களாகவே ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒருபக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. எனவே இந்தியாவுக்கு போதுமான கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை.. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..
கடந்த பல நாட்களாகவே பல ஊர்களிலும் பல ஹோட்டல்கள் செயல்படவில்லை.. செய்ல்படும் ஹோட்டல்களிலும் உணவு வகைகள் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உணவுக்கான விலையையும் உயர்த்திவிட்டனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமக ஆன்லைனில் உணவு டெலிவரி பண்ணும் நிறுவனங்களும் விலையை ஏற்றிவிட்டனர்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக zomato நிறுவனம் உணவு டெலிவரி செய்யும் கட்டணத்தை அதிகரித்துவிட்டது. பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 12.50-லிருந்து 14.90ஆக உயர்த்தியிருக்கிறது. இனி ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும் போதும் கூடுதலாக 2.40 காசு கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. எனவே இந்தியாவுக்கு போதுமான கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை.. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..
கடந்த பல நாட்களாகவே பல ஊர்களிலும் பல ஹோட்டல்கள் செயல்படவில்லை.. செய்ல்படும் ஹோட்டல்களிலும் உணவு வகைகள் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உணவுக்கான விலையையும் உயர்த்திவிட்டனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமக ஆன்லைனில் உணவு டெலிவரி பண்ணும் நிறுவனங்களும் விலையை ஏற்றிவிட்டனர்.
அடுத்த கட்டுரையில்