திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (15:45 IST)

கேரளாவில் எல்லோ அலர்ட்!!

கேரளாவில் மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய கேரள மாவட்டங்கள் இதில் அடக்கம்.