திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 மே 2020 (08:20 IST)

கேரளாவில் கள்ளுக்கடைகள் திறக்க திட்டமா? பெரும் பரபரப்பு

கேரளாவில் கள்ளுக்கடைகள் திறக்க திட்டமா?
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முதல் கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது. இந்த ஊரடங்கு மே 17ஆம் தேதி வரையும் இருக்கும் 
 
இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு சில தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நீதிமன்றத்தின் உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேரளாவில் தற்போது வரை மதுக்கடைகள் திறக்கவில்லை என்றாலும் கள்ளு கடைகளை திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள தென்னங்கள் மற்றும் பனங்கள் உற்பத்தியாளர்கள் கள்களை இறக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இதனை அடுத்து விரைவில் அங்கு கள்ளுக்கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து கேரள அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் மதுப்பிரியர்கள் திண்டாடி வருவதாகவும் இதனை அடுத்து ஒரு சில தற்கொலைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மதுக்கடைகளை விரைவில் திறக்க கேரள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கள்ளுக்கடைகளைத் திறந்துவிட்டு அதன்பின் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று கேரள அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது