தொடர்புடைய செய்திகள்
- புதிய மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- டாக்டர் ராமதாஸ்
- இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது போலீஸில் புகார் !
- தோனியின் 42 வது பிறந்தநாள்... பிரமாண்ட கட்- அவுட் வைத்த ரசிகர்கள்..வைரல் புகைப்படம்
- ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு.. தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்
- பெண்ணின் உள்ளாடையை திருடிய விவகாரத்தில் கலவரம் ! 10 பேர் காயம்…20 பேர் கைது
உலகின் மிகப்பெரிய அலுவலகம் இனி பென்டகன் இல்லை.. குஜராத்தில் தான்.. ஆச்சரிய தகவல்..!
உலகின் மிகப்பெரிய அலுவலகம் என்ற பெருமையை இதுவரை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பென்டகன் இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் பென்டகனை விட பெரிய அலுவலக கட்டிடம் ஒன்று குஜராத் மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 15 மாடிகளை கொண்டுள்ளது.
வைரத் தொழிலின் தலைநகரமாக விளங்கும் சூரத்தில் வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
4200 அலுவலங்கள் செயல்படும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கட்டிடத்தை திறக்க திறந்து வைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva
