1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. tomorrow parliament session starts

நாளை தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்: மேகாதாது விவகாரத்தை எழுப்புமா திமுக?

நாடாளுமன்றம்
நாளை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதை அடுத்து இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் உள்பட தமிழக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவர பிரச்சனை, விலைவாசி விவகாரம், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 
 
மேலும் திமுக எம்பி உள்பட தமிழக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி