1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (13:51 IST)

இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது போலீஸில் புகார் !

இயக்குநர் விக்னேஷ் சிவன்  மீது அவரது உறவினர்கள்  திருச்சி லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளனர்.
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்  போடா போடி,    நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதுதவிர, நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி உள்ளிட்ட பட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், நடிகை நயன்தாராவை  பல ஆண்டுகளாகக் காதலித்து  நிலைய்ய்ல், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இயக்குநர்   விக்னேஷ் சிவன் மீது அவரது உறவினர்களான அவரது பெரியப்பா மாணிக்கம், கோவையில் வசித்து வரும் குஞ்சிதபாதம் மற்றும் அவரது மனைவி  சரோஜா  ஆகியோர்  திருச்சி மாவட்டம் லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஸ் சிவன் மீது புகார் அளித்துள்ளனர்.

அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது: 

‘’ எனக்கு இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. இதற்கு சிகிச்சை பெற வேண்டும், இதுபற்றி லால்குடியில் வசிக்கும் என் அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். அவர் தங்கள் சொத்தில்  வில்லங்கம் உள்ளதால் அதை விற்க முடியாத நிலையில் உள்ளதாக கூறினார்.  இந்த நிலையில்,  இந்த சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன், அவது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளதாக ‘’தெரிவித்துள்ளார்.