1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (13:08 IST)

பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்: முதல்வர் அறிவிப்பு!

women
பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்: முதல்வர் அறிவிப்பு!
 பெண் எம்.எல்.ஏக்கள்மட்டுமே பங்கு பெறும் சிறப்பு சட்டசபை கூட்டம் வரும் 22ஆம் தேதி கூட்டப்படும் என உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநில மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும் 22ஆம் தேதி அன்று பெண் உறுப்பினர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் பெண் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த சிறப்பு ஒரு நாள் கூட்டத்தொடர் இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்

 
உத்தரபிரதேச மாநில சட்டசபையில் 47 ஏழு பெண் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் 6 சட்டசபை பெண் கவுன்சிலர் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பெண் எம்.எல்.ஏக்களுக்காக உபி மாநில அரசு நடத்தும் இந்த சிறப்பு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்