1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:59 IST)

“அவர்தான் நிச்சயமாக ஓப்பனர்…” யூகங்களுக்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் ஷர்மா!

“அவர்தான் நிச்சயமாக ஓப்பனர்…” யூகங்களுக்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் ஷர்மா!
இந்திய கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பை தொடருக்காக இப்போது தயாராகி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அன்றைய அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் “ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் போதுதான் சதமடித்துள்ளார்.” என்று பத்திரிக்கையாளர்கள் சொன்ன போது அதற்கு கே எல் ராகுல் சற்று கடுப்போடு பதிலளித்துள்ளார்.

ஆனால் பல முன்னாள் வீரர்கள் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி இப்போது பேசியுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா “டி 20 உலகக்கோப்பையில் கே எல் ராகுல்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்” எனக் கூறி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.