திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (10:40 IST)

2 நாட்கள் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் தகவல்!

rahul
ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரையை செய்து வரும் நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை நடைபெறாது என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தி வருகிறார் என்பதும் 30ஆம் தேதி கர்நாடகத்தில் அவர் பாதயாத்திரை நடைபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதையாத்திரை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கர்நாடகத்தில் நடைபெறாது என்றும் அதற்கு அடுத்த நாட்களில் பாதயாத்திரையை தொடங்கப்படும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் சிவகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கர்நாடக மாநிலத்திற்கு வரும் ராகுல் காந்தியின் அக்டோபர் 1ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் நெசவாளர் மையத்தை பார்வையிடுவார் என்றும் மைசூருக்கு வந்து தசரா கண்காட்சி வளாகத்தில் தங்கி அதன் பின்னரும் அக்டோபர் 3ஆம் தேதி மைசூரில் இருந்து பாத யாத்திரையை தொடங்கி தெலுங்கானா செல்வார் என்றும் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்