1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (07:57 IST)

காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்.. பயங்கரவாத சதியா?

drone
கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்கள், வெடி பொருள்கள், பணம் ,போதைப் பொருள்கள் ஆகியவற்றை கடத்துவதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணா என்ற பகுதியில் நேற்று அனுமதியின்றி ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது குறித்து உடனடியாக அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து போலீசார் அந்த ட்ரோனை கைப்பற்றினர். அனுமதி இன்றி பறந்த அந்த ட்ரோன் பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்று நினைத்த நிலையில் இந்த ட்ரோன் திருமண விழாவை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது
 
 இதனை அடுத்து அனுமதி இன்றி ட்ரோனை பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமண வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்தனர். 
 
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பாகிஸ்தான் எல்லையில் அனுமதி இன்றி பயங்கரவாதிகளின் ட்ரோன்கள் பறந்து வருவதை அடுத்து போலீசார் மிகுந்த எச்சரிக்கை உடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva