திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (13:10 IST)

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன் : சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

drone
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன் : சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
இந்தியா எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் ஊடுருவ முயன்றதை அடுத்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் ஒன்று வருவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். 
 
இதனை அடுத்து அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் 3 கிலோ ஹெராயின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran